بسم الله الرحمن الرحيم
ஐவேளை தொழுகை, ஜூம்ஆ, பெருநாட்கள், ரமலான், தராவீஹ் , நோன்பு திறப்பு, தினமும் மக்தப் மத்ரஸா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நமது பள்ளிவாசல் நான்கு அடுக்குகளைக் கொண்டது. கீழ் தளம் ஐவேளை தொழுகையாளிகளுக்கு வசதியாக குளிர்சாதன மயமாக்கபட்டுள்ளது.
ஜெனரேட்டர் வசதியுடன் அனைத்து நவீன வசதிகளும் தொழுகையாளிகளுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது (அல்ஹம்துலில்லாஹ்)
மேலும், ஜன்னத்துல் உலூம் என்ற மக்தப் மதரஸா 8எ, நேரு பூங்கா தெரு ,வரதராஜபுரம், சிங்காநல்லூரில் நமது பள்ளிக்குச் சொந்தமான மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் தற்போது 80 மாணவ மாணவிகள், நான்கு உஸ்தாதுகளை கொண்டு இயங்கி வருகின்றது. மேலும், தற்போது பருவ வயதை அடைந்த மாணவிகளுக்காகவும் குடும்ப பெண்களுக்ககாகவும் மார்க்க உயர் கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.(அல்ஹம்துலில்லாஹ்)








